IPL 2023: GT vs SRH டாஸ் ரிப்போர்ட்..! குஜராத் டைட்டன்ஸில் அதிரடி மாற்றங்கள்.. சன்ரைசர்ஸில் ஒரு மாற்றம்
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இன்றைய முக்கியமான போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.
இந்த போட்டியில் ஜெயித்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும் என்பதால் அந்த அணி வெற்றி முனைப்பில் இறங்குகிறது. சன்ரைசர்ஸ் அணியும் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கும்பட்சத்தில் பின்புற வாய்ப்பு ஒன்று உள்ளது. எனவே இரு அணிகளும் வெற்றி முனைப்பில் ஆடுகின்றன.
அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணியில் க்ளென் ஃபிலிப்ஸுக்கு பதிலாக மார்கோ யான்சென் ஆடுகிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விஜய் சங்கருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சன் ஆடுகிறார். இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா இந்த சீசனில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடுகிறார். யஷ் தாகூரும் ஆடுகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், அப்துல் சமாத், சன்வீர் சிங், மயன்க் மார்கண்டே, மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, டி.நடராஜன்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், தசுன் ஷனாகா, ராகுல் டெவாட்டியா, மோஹித் சர்மா, ரஷீத் கான், முகமது ஷமி, நூர் அகமது.