ஐபிஎல்லில் தரமான சம்பவம் இருக்கு – வச்சு செய்ய போகும் புவனேஷ்வர் குமார்!
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வந்தவர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 4 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், ஒரு முறை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
நான் விளையாடுறது மாதிரியே இருக்கு – ரிங்கு சிங்கின் பேட்டிங்கை புகழ்ந்து பேசிய யுவராஜ் சிங்!
டி20யில் 77 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக விளையாடினார். இதே போன்று நவம்பரில் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு கடந்த ஒரு வருடமாக எந்த சர்வதேச போட்டியிலும் புவனேஷ்வர்குமார் விளையாடவில்லை.
ஆனால், ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடினார். இந்த நிலையில் தான் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் வரிசையாக 8 விக்கெட்டுகள் கைப்பற்றி பிசிசிஐயின் கவனம் ஈர்த்தார்.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு!
இன்னும் 2 மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இருக்கிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள புவனேஷ்வர் குமார் இந்த ஆண்டு நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.