Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 2020: இந்த 4 டீமும் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும்.. அந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. இந்திய வீரர் ஆருடம்

ஐபிஎல் 2020ன் டைட்டிலை எந்த அணி வெல்லும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆருடம் தெரிவித்துள்ளார். 
 

sreesanth prediction on play off qualifiers and title winner of ipl 2020
Author
Chennai, First Published May 29, 2020, 7:17 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கியதால் 2013ம் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் ஆடவில்லை. கடந்த ஆண்டுதான், அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் மீதான தடை முடிகிறது. எனவே மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்தில் உள்ளார் ஸ்ரீசாந்த். 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஹெலோ லைவ் உரையாடலில் ஏற்கனவே பேசிய ஸ்ரீசாந்த், மீண்டும் ஹெலோ லைவில் பேசியுள்ளார். அப்போது, தனது ஆல்டைம் உலக ஒருநாள் லெவனை தேர்வு செய்த ஸ்ரீசாந்த், மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். 

sreesanth prediction on play off qualifiers and title winner of ipl 2020

ஐபிஎல் 2020 குறித்த தனது ஆருடத்தையும் தெரிவித்தார். ஐபிஎல் 13வது சீசன் கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அக்டோபர் - நவம்பரில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல்லுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ஐபிஎல் 2020ல் எந்த அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என ஸ்ரீசாந்த் ஆருடம் தெரிவித்துள்ளார். 

அதுகுறித்து கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீசாந்த், ஐபிஎல்லில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் கண்டிப்பாக பிளே ஆஃபிற்கு தகுதி பெறும். அவை தவிர, ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெறு. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃபிற்குள் நுழையும். 

sreesanth prediction on play off qualifiers and title winner of ipl 2020

ஏற்கனவே 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 5வது முறையாக இந்த சீசனிலும் கோப்பையை வெல்லும் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios