7 ஆண்டு கால தடைக்கு பின், சையத் முஷ்டாக் அலி தொடரில் மீண்டும் களம் காண்கிறார் ஸ்ரீசாந்த்.
ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் 7 ஆண்டுகள் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டு, தடை முடிந்து மீண்டுவந்துள்ள ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த், மீண்டும் கிரிக்கெட் களம் காண்கிறார். உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது.
சையத் முஷ்டாக் அலி தொடருக்கான கேரள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றுள்ளார். ஸ்ரீசாந்த் இந்த தொடரில் கேரள அணிக்காக ஆடுவது உறுதி. 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களம் காணும் மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் இருக்கும் ஸ்ரீசாந்த், துயர் சந்தித்த மனிதனைவிட வலுவானவன் யாரும் இல்லை என்றும் தனக்கு ஆதரவாக இருந்த கேரள கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐக்கு நன்றி என டுவீட் செய்துள்ளார்.
கேரள அணியில் சஞ்சு சாம்சன், சச்சின் பேபி, பாசில் தம்பி, ஜலஜ் சக்ஸேனா, ராபின் உத்தப்பா, முகமது ஆசிஃப், மிதுன் எஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கேரளா அணி:
சஞ்சு சாம்சன், சச்சின் பேபி, ஸ்ரீசாந்த், பாசில் தம்பி, ஜலஜ் சக்ஸேனா, ராபின் உத்தப்பா, விஷ்ணு வினோத், சல்மான் நிசார், நிதீஷ் , ஆசிஃப் கே.எம், அக்ஷய் சந்திரன், அபிஷேக் மோகன், வினூப் எஸ் மனோகரன், முகமது அசாருதீன், ரோஹன் எஸ் குன்னுமால், மிதுன் எஸ்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 30, 2020, 11:15 PM IST