நாடு முழுவதும் இன்று 77ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய விளையாட்டு அமைப்புகள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றி மரியாதை செய்தார். முதல்வர் ஸ்டாலின் முதல்வரான பின்னர் 3ஆவது முறையாக தேசியக் கொடியேற்றினார்.

இந்த நிலையில், 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய விளையாட்டு அமைப்புகள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

ஹாக்கி இந்தியா:

இந்த சுதந்திர தினத்தில் மூவர்ணக் கொடியை உயர்த்தி, ஹாக்கி ஸ்டிக்குகளை இன்னும் உயரத்தில் பறக்க விடுவோம்! சுதந்திரம், ஒற்றுமை மற்றும் புகழின் இலக்குகளை ஒன்றாக அடிப்போம். எங்கள் நம்பமுடியாத வீரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சக இந்தியர்கள் அனைவருக்கும் ஹாக்கி இந்தியா 77வது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!

Scroll to load tweet…

பிசிசிஐ:

"ஒவ்வொரு இந்தியனுக்கும் 77வது சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்," என்று BCCI ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் பின்னணியுடன் கூடிய படம் மற்றும் ஹேப்பி சுதந்திர தின செய்தியுடன் பதிவிட்டுள்ளது.

Scroll to load tweet…

குத்துச்சண்டை கூட்டமைப்பு:

"நமது கடந்த காலத்தை போற்றவும், நிகழ்காலத்தை கொண்டாடவும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி உழைக்கவும் ஒரு நாள். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!" இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

Scroll to load tweet…