தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் தென்னாப்பிரிக்க பவுலர் ஒருவர் இரண்டு கைகளிலும் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கேப்டவுன் பிளிட்ஸ் மற்றும் டர்பன் ஹீட் அணிகளுக்கு இடையே டர்பனில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேப்டவுன் பிளிட்ஸ் அணி 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது. 175 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டர்பன் ஹீட் அணி 20 ஓவரில் 164 ரன்கள் மட்டுமே அடித்ததால், கேப்டவுன் பிளிட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கேப்டவுன் பிளிட்ஸ் அணியில் ஆடிய ஸ்பின்னர் க்ரேகோரி மாலோக்வானா, இரண்டு கைகளிலும் பந்துவீசியதோடு, இரண்டு கைகளிலும் விக்கெட்டும் வீழ்த்தினார்.

3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். அந்த 2 விக்கெட்டுகளும் இரு வேறு கைகளில் வீழ்த்தப்பட்டது. அந்த வீடியோ இதோ...
Scroll to load tweet…
