உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 8வது போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. 

இது தென்னாப்பிரிக்காவுக்கு மூன்றாவது போட்டி. இந்திய அணிக்கு முதல் போட்டி. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இந்திய அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று வெற்றி முகத்துடன் உலக கோப்பையை தொடங்கும் முனைப்பில் உள்ளது. 

சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் மார்க்ரம் இல்லை; மில்லர் அணியில் இருக்கிறார். கடந்த போட்டியில் ஆடாத ஆம்லா அணியில் உள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர் ஷாம்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருந்த நான்காம் வரிசையில் ராகுல் களமிறங்குகிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக பும்ராவும் ஷமியும் கலமிறங்க வாய்ப்புள்ளதாகத்தான் பார்க்கப்பட்டது. அண்மைக்காலமாக புவனேஷ்வர் குமார் ஃபார்மில் இல்லாததால் சரியாக வீசவில்லை. நல்ல வேகமாக வீசமுடியாமலும் திணறிவந்தார். அதேநேரத்தில் ஷமி அபாரமாக வீசிக்கொண்டிருந்ததால் ஷமி தான் அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ராவுடன் புவனேஷ்வர் குமார் இறக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா. 

தென்னாப்பிரிக்க அணி:

ஹாஷிம் ஆம்லா, டி காக்(விக்கெட் கீப்பர்), டுபிளெசிஸ், வாண்டெர் டசன், டேவிட் மில்லர், டுமினி, ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபாடா, இம்ரான் தாஹிர், ஷாம்ஸி.