இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 211 ரன்கள் அடித்தும், 212 ரன்கள் என்ற கடின இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி தோற்றது.
முதல் டி20 போட்டியில் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கையில் காயம் காரணமாக குயிண்டன் டி காக் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசன் ஆடுகிறார். இளம் வீரர் ஸ்டப்ஸுக்கு பதிலாகரீஸா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), ட்வைன் ப்ரிட்டோரியஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
