Asianet News TamilAsianet News Tamil

SA20: பட்டைய கிளப்பும் தென்னாப்பிரிக்க சீனியர் வீரர்கள்..! 2ம் பாதி போட்டிகள் மீது எகிறும் எதிர்பார்ப்பு

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் இந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகமான நிலையில், முதல் சீசனே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

South Africa Veterans Turn the Clock Back to Add Unexpected Thrill to SA20
Author
First Published Feb 1, 2023, 1:29 PM IST

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், எம்.ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேபிடள்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் கலந்துகொண்டு ஆடிவரும் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கி ஜனவரி 24 வரை விறுவிறுப்பாக நடந்த நிலையில், அதன்பின்னர் ஒரு சிறு இடைவெளி விடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கி பிப்ரவரி 11 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. 

சர்வதேச அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் SA20 (தென்னாப்பிரிக்க டி20) லீக் தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஆடிய புள்ளி பட்டியலில் 23 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வைன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த அணியின் நெட் ரன்ரேட்டும் (2.027) அருமையாக உள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 17 புள்ளிகளை பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. 

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் 2ம் பாதி வரும் பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது. 2ம் பாதியில் இன்னும் பல வீரர்களின் அபாரமான ஆட்டங்களை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். பொதுவாகவே டி20 போட்டிகள் இளம் வீரர்களுக்கான அதிரடி ஆட்டமாக பார்க்கப்பட்டாலும், வயது அதிகமான அனுபவம் வாய்ந்த வீரர்களும் அபாரமாக ஆடி அசத்திவருகின்றனர். 

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் மற்றும் டிவால்ட் பிரெவிஸ் ஆகிய இளம் வீரர்கள் அதிரடியாக ஆடி ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்தனர். ஆனால் தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் 2 சூப்பர் ஸ்டார்கள் என்றால், அது அனுபவம் வாய்ந்த 2 சீனியர் வீரர்கள் தான்.

38 வயதான ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் வாண்டர் மெர்வி ஆகிய இருவரும் தான் ஸ்பெஷல் வீரர்கள். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிவரும் 38 வயதான ஃபாஃப் டுப்ளெசிஸ் 58 பந்தில் சதமடித்து அசத்தினார். இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 277 ரன்களை குவித்துள்ள டுப்ளெசிஸ், இந்த சீசனில் இதுவரை அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.  

தென்னாப்பிரிக்கக்காரரான 38 வயதான வாண்டர் மெர்வி சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது நெதர்லாந்து அணிக்காக ஆடிவருகிறார். ஆல்ரவுண்டரான இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்காகவும் ஆடியிருக்கிறார். இந்த சீசனில், 4.73 என்ற எகானமி ரேட்டுடன், இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். 

தென்னாப்பிரிக்க டி20 லீக் அறிமுக சீசனில் கோப்பையை வெல்வதற்காக 6 அணிகளும் கடுமையாக போட்டி வரும் நிலையில், ரசிகர்களுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்க டி20 போட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள் என்றால், Betway-ல் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்து பாருங்கள்

ஒவ்வொரு போட்டி நாளிலும் நீங்கள் பெரிய பருசிகளை வெல்வதற்கான வாய்ப்புள்ளது.

SA20-ன் மிகத்தீவிரமான ரசிகர்கள், சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், போட்டி முடிவுகளை இதில் பெறலாம். Betway-ல் துல்லியமான கணிப்புகளின் மூலம் பரிசுகளை வெல்லலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios