இலங்கையை தங்களது சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

ஜனவரி 26ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் கராச்சியிலும், அடுத்த டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியிலும் நடக்கிறது. 3 டி20 போட்டிகள் லாகூரில் நடக்கவுள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் குயிண்டன் டி காக் தலைமையிலான டெஸ்ட் அணியில் டுப்ளெசிஸ், ரபாடா, மார்க்ரம், எல்கர், இங்கிடி, ஹென்ரிக்ஸ், கேஷவ் மஹாராஜ், ப்ரிட்டோரியஸ், ஷாம்ஸி, லிண்டே ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

20 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன்), டெம்பா பவுமா, மார்க்ரம், டுப்ளெசிஸ், டீன் எல்கர், ரபாடா, ப்ரிட்டோரியஸ், கேஷவ் மஹாராஜ், லுங்கி இங்கிடி, வாண்டெர் டசன், அன்ரிக் நோர்க்யா, மல்டர், லூதோ சிபம்லா, ஹென்ரிக்ஸ், கைல் வெரெய்ன், சாரெல் எர்வீ, அல்விரோ பீட்டர்சென், ஷாம்ஸி, ஜார்ஜ் லிண்டே, டேரைன் டுபாவிலான், சாரா பார்ட்மேன்.