தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ஆடும் 6 அணிகளை ஐபிஎல் அணி  உரிமையாளர்கள் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுதும் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஐபிஎல், பிக்பேஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேச பிரீமியர் லீல், கனடா பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

எத்தனை டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தான் டாப். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் உலகின் பணக்கார டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். 

இதையும் படிங்க - விராட் கோலியுடன் பேச ஒரு 20 நிமிடம் கிடைத்தால் போதும்.. அவரை ஃபார்முக்கு கொண்டு வந்துருவேன் - சுனில் கவாஸ்கர்

ஐபிஎல், பிக்பேஷ் லீக் ஆகியவற்றிற்கு இணையாக தென்னாப்பிரிக்காவிலும் டி20 லீக் தொடரை நடத்த வேண்டும் என விரும்பிய கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் வரும் 2023 ஜனவரி - பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடருக்கான கமிஷனராக தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ஆடும் 6 அணிகளை ஐபிஎல் அணி உரிமையாளர்கள் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

எந்தெந்த ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் எந்தெந்த அணியை வாங்கியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

1. கேப்டவுன் - முகேஷ் அம்பானி (மும்பை இந்தியன்ஸ்)

2. ஜோஹன்னஸ்பர்க் - என் ஸ்ரீநிவாசன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

3. டர்பன் - சஞீவ் கோயங்கா (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)

4. போர்ட் எலிசபெத் - கலாநிதி மாறன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

5. பிரிட்டோரியா - பார்த் ஜிண்டால் (டெல்லி கேபிடள்ஸ்)

6. பார்ல் - மனோஜ் படாலே (ராஜஸ்தான் ராயல்ஸ்)

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் 6 அணிகளை ஐபிஎல் அணி உரிமையாளர்கள் வாங்கியிருப்பதன் மூலம், பெயரளவில் தான் இது தென்னாப்பிரிக்க டி20 லீக். ஆனால் இது மினி ஐபிஎல் என்கிற அளவில் உள்ளது.