கொரோனாவிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் போட்டிகள் நடந்துவருகின்றன. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா, அயர்லாந்துக்கு எதிராக ஆடியது. ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து முடியவுள்ளது.

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

அதேபோல் ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அந்த தொடருக்கான 24 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குயிண்டன் டி காக் தலைமையிலான அணியில் ஐபிஎல்லில் அசத்திய ரபாடா, நோர்க்யா ஆகியோரும், ஹென்ரிச் கிளாசன், வாண்டெர் டசன், இங்கிடி, மஹாராஜ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து தொடருக்கான 24 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன்), டெம்பா பவுமா, ஜூனியர் டாலா, ஃப்ளெசிஸ், ஃபார்டியூன், பியூரன் ஹென்ரிக்ஸ், ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ், மாலன், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, நோர்க்யா, ஃபெலுக்வாயோ, ட்வைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, ஷாம்ஸி, ட்வைன் பிரிட்டோரியஸ், லுத்தோ சிபாம்லா, ஜேஜே ஸ்மட்ஸ், க்ளெண்டன் ஸ்டர்மேன், பில்ஜோன், வாண்டெர் டசன், கைல் வெரெய்ன்.