ஜெய் ஸ்ரீராம் – அமைதி, ஆன்மீக ஞானம் கிடைக்கட்டும் – ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டா – கேசவ் மகாராஜ் வாழ்த்து!

நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ்   வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

South Africa Player Keshav Maharaj Wishes Everyone Pran Pratishtha of Lord Rama in Ram Temple in Ayodhya tomorrow rsk

உத்திர பிரதேசத்தில், கட்டப்பட்டு வந்த அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நாளை 22ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யட்டு அயோத்தி நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியோர்கள், மற்றும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, அனுஷ்கா சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ், கபில் தேவ், சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா, சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் டிராவிட், ரவீந்திர ஜடேஜா என்று கிரிக்கெட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்த கோயிலை திறந்து வைக்க உள்ளார். இதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோயில்களில் புனித நீராடி வருகிறார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் ராமரின் தீவிர பக்தரான தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். அயோத்தியில் நாளை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தென் ஆப்பிரிக்காவில் உள்ள எனது இந்திய சமூகத்திற்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம், ஆன்மீக ஞானம் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீராம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கேப்டவுனில் நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியின் போது கேசவ் மகாராஜ் களமிறங்கிய போது ராம் சியா ராம் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த பாடலுக்கு பீல்டிங்கில் இருந்த விராட் கோலி ஸ்ரீ ராமர் போன்று வில் அம்பு எய்வது போன்று போஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios