தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் அடுத்த 2 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. 

கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் டி காக்கை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டி காக்கை தவிர அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி வெறும் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதையடுத்து 217 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனவே தென்னாப்பிரிக்காவை விட ஒட்டுமொத்தமாக 465 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

Also Read - விக்கெட் கீப்பர்னா இப்படி இருக்கணும்.. இப்படி ஒரு ரன் அவுட்டை பார்க்குறதுலாம் ரொம்ப அரிது.. வீடியோ

இரண்டாவது இன்னிங்ஸில் ரூட்டின் கேட்ச்சை பேக்வார்டு பாயிண்ட்டில் அபாரமாக கேட்ச் பிடித்தார் கேப்டன் டுப்ளெசிஸ். அரைசதம் அடித்த ரூட், ஹென்ரிக்ஸின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் முனைப்பில் அடித்தார். அதை பேக்வார்டு பாயிண்ட்டில் ஃபீல்டிங் நின்ற டுப்ளெசிஸ் சிறப்பாக கேட்ச் செய்தார். இதையடுத்து ரூட் 58 ரன்களில் நடையை கட்டினார். அந்த அபாரமான கேட்ச்சின் வீடியோ இதோ.. 

 

இந்த போட்டியில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 466 ரன்கள் தேவை. இரண்டு நாட்கள் இருப்பதால், தென்னாப்பிரிக்க அணி நன்றாக பேட்டிங் ஆடினால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் கடைசி இன்னிங்ஸில் 465 ரன்களை, இங்கிலாந்து போன்ற அனுபவம் வாய்ந்த நல்ல பவுலிங் யூனிட்டை கொண்ட அணிக்கு எதிராக விரட்டுவது எளிதான காரியம் அல்ல.