ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Also Read - ஆட்டநாயகன் விருதை தப்பான ஆளுக்கு கொடுத்துட்டாங்க.. சர்ச்சை நாயகன் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ஜடேஜாவின் நறுக் கேள்வி

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 15 ஓவரில் வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி, சிட்னி தண்டர் அணிக்கு 12 ஓவரில் 96 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான பேட்டிங்கால் அந்த இலக்கை எட்டி சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அருமையாக  ரன் அவுட் செய்தார். அஷ்டன் அகர் வீசிய 9வது ஓவரின் ஐந்தாவது பந்தை விக்கெட் கீப்பருக்கு பின்னால் அடித்த கவாஜா, பந்து விக்கெட் கீப்பரை கடந்துவிடும் என்ற நம்பிக்கையில் ரன் ஓடுவதற்காக நகர்ந்தார். ஆனால் அந்த பந்தை காலால் நிறுத்தி, அதை எடுத்து ரன் அவுட் செய்தார் இங்லிஸ். சாமர்த்தியமாக செயல்பட்ட இங்லிஸ், அதில் எந்தவித தவறும் செய்யாமல், அந்த ரன் அவுட்டை தெளிவாக செய்தார். அந்த வீடியோ இதோ..