பதிலுக்கு பதில் புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்கா, ஒய் பிளட், சேம் பிளட் கத மாதிரி அடி வாங்கிய ராகுல் அண்ட் டீம்
இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் 1-1 என்று தொடரை சமன் செய்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று கியூபெர்காவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் சுதாரித்துக் கொண்டு பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக சாய் சுதர்சன் 62 ரன்களும், கேஎல் ராகுல் 56 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 12 ரன்களில் கிளீன் போல்டானார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கிய விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்தனர். இதில், தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 81 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸ்ஸி வான் டெர் டூசென் 36 ரன்களில் ரிங்கு சிங் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
IPL 2024 Player Auction: தமிழக வீரர் ஷாருக் கானை ரூ.7.40 கோடிக்கு வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்!
கடைசி வரை விளையாடிய டோனி டே ஜோர்சி 122 பந்துகளில் 9 பவுண்டரி 6 சிக்ஸ் உள்பட 119 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.