Asianet News TamilAsianet News Tamil

நான் சுருண்டு கீழே விழுந்தவுடனே என் மண்டையில் அந்த சம்பவம்தான் ஓடுச்சு.. மரண பீதியை வெளிப்படுத்திய ஸ்மித்

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் அடிவாங்கிய ஸ்மித், மூன்றாவது போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், உடற்தகுதி பெற்றபின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித், கழுத்தில் அடிவாங்கி கீழே விழுந்தபோது இருந்த தனது மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்கள் குறித்து பேசியுள்ளார். 
 

smith speaks about thoughts running in his mind after archers bouncer floored him
Author
England, First Published Aug 29, 2019, 3:47 PM IST

ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான், ஸ்மித் இறங்கிய முதல் டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் திகழ்ந்தார். இதையடுத்து இரண்டாவது போட்டியில் ஸ்மித்தை சமாளிப்பதற்காகவே ஆர்ச்சரை இறக்கியது இங்கிலாந்து அணி. 

smith speaks about thoughts running in his mind after archers bouncer floored him

லார்ட்ஸில் நடந்த அந்த போட்டியிலும் ஸ்மித் சிறப்பாக ஆடினார். ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து அணியில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர், ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பதிலாக ஸ்மித்தையே வீழ்த்தினார். ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் அடித்தது. அதனால் பெவிலியன் திரும்பிய ஸ்மித், மீண்டும் களத்திற்கு வந்து சிறிது நேரம் ஆடினார். ஆனால் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிவாங்கிய ஸ்மித்திற்கு தலைவலி, கழுத்து வலி இருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக லபுஷேன் ஆடினார்.

smith speaks about thoughts running in his mind after archers bouncer floored him

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் ஆடவில்லை. அந்த போட்டியிலும் லபுஷேன் தான் ஆடினார். ஸ்மித் முழுமையாக குணமடைந்து முழு உடற்தகுதி பெற்றுவிட்டதால் அடுத்த போட்டியில் ஸ்மித் ஆடவுள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 4ம் தேதி மான்செஸ்டாரில் தொடங்குகிறது. 

இந்நிலையில், உடற்தகுதி பெற்றபின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித், கழுத்தில் அடிவாங்கி கீழே விழுந்தபோது இருந்த தனது மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்கள் குறித்து பேசியுள்ளார். 

smith speaks about thoughts running in his mind after archers bouncer floored him

இதுகுறித்து பேசியுள்ள ஸ்மித், பின்கழுத்தில் அடிவாங்கி நான் சுருண்டு விழுந்தபோது, எனது மண்டையில் சில விஷயங்கள் ஓடின. குறிப்பாக, இதேமாதிரி நடந்த கடந்தகால சம்பவம் நினைவுக்கு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பற்றித்தான் சொல்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன் என்றார். 

கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூக்ஸ், உள்நாட்டு போட்டியில் ஆடியபோது, இதே மாதிரிதான் பின் கழுத்தில் அடிவாங்கி உயிரிழந்தார். அந்த சம்பவத்தை குறிப்பிட்டுத்தான் ஸ்மித் பேசினார். கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சம்பவம் அது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios