Asianet News TamilAsianet News Tamil

வில்லியம்சன் - வார்னர் கேப்டன்சியில் உள்ள வித்தியாசம்..! நச்சுனு சொன்ன சித்தார்த் கவுல்

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள ஃபாஸ்ட் பவுலர் சித்தார்த் கவுல், அவர்கள் இருவரின் கேப்டன்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிவித்துள்ளார்.
 

siddharth kaul opines difference between kane williamson and david warner captaincy
Author
Chennai, First Published May 28, 2021, 10:58 PM IST

ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஐபிஎல் 14வது சீசனில் டேவிட் வார்னரின் கேப்டன்சியில் சன்ரைசர்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்திக்க, 2016ல் கோப்பையை வென்று கொடுத்தவர் என்று கூட பார்க்காமல், அவரை ஓரங்கட்டிவிட்டு, கேன் வில்லியம்சனை கேப்டனாக்கி எதிர்கொண்டது.

டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவருமே நல்ல கேப்டன்கள் தான். ஆனால் இருவரின் அணுகுமுறையும் வெவ்வேறு. கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான, தலைசிறந்த கேப்டன். வில்லியம்சனும் 2018 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸை ஃபைனலுக்கு அழைத்துச்சென்றார்.

siddharth kaul opines difference between kane williamson and david warner captaincy

இவர்கள் இருவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள ஃபாஸ்ட் பவுலர் சித்தார்த் கவுல், இருவரின் கேப்டன்சி குறித்து பேசியுள்ளார். “வில்லியம்சனை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட பவுலரால் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்துகொண்டு செயல்படுவார். டேவிட் வார்னர், பவுலரை அவரது திறமையை வெளிப்படுத்தவைக்க முயல்வார். வில்லியம்சன், பவுலரின் திட்டங்களை கேட்டுவிட்டு, பின்னர் அவரது திட்டங்களையும் ஆலோசனைகளையும் பகிர்வார். வார்னர், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சொல்வார் என்று கவுல் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios