தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இலங்கை தொடருக்காக தீவிரமாக தயாராகிவருகிறார்.  

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது தோள்பட்டையில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் அந்த தொடரிலிருந்து விலகியதுடன், ஐபிஎல்லிலும் ஆடவில்லை.

ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாததால், ரிஷப் பண்ட் தான் ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸை வழிநடத்தினார். இதற்கிடையே தோள்பட்டையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், 3-4 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், அவர் தோள்பட்டைக்கு கஷ்டம் கொடுக்கும் வகையில் பயிற்சி செய்யக்கூடாது என்றாலும், இலங்கை தொடரில் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் சிறு சிறு பயிற்சிகளை தொடங்கிவிட்டார்.

ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடினால் அவர் தான் கேப்டன். அதன்பின்னர் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்கான இந்திய அணியில் இடம்பெற, இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடும் முனைப்பில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், தோள்பட்டைக்கு ஒர்க் அவுட் ஆகும் வகையில் சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்துவருகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Scroll to load tweet…