உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷோயப் மாலிக், கனடா டி20 லீக்கில் அசத்தலாக ஆடியுள்ளார். 

பாகிஸ்தான் அணியில் 1999ம் ஆண்டிலிருந்து ஆடிவந்த ஷோயப் மாலிக்கிற்கு, நடந்து முடிந்த உலக கோப்பை தொடர் தான் கடைசி தொடர். உலக கோப்பையில் பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் களமிறங்கிய மாலிக், சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டானார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதுதான் அவரது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி. 

ஏனெனில் அதன்பின்னர் உலக கோப்பையில் எஞ்சிய போட்டிகளில் அவர் ஆடவில்லை. உலக கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் அறிவித்தார். டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்ட வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் மாலிக்கின் பெயர் இல்லை. 

இந்நிலையில், கனடா டி20 லீக்கில் ஆடிவரும் மாலிக், வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இந்த லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணியும் ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியும் மோதின.

மழையால் இந்த போட்டி தாமதமாக தொடங்கப்பட்டதால் 16 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வான்கூவர் நைட்ஸ் அணியின் தொடக்க வீரர் வைசி, கேப்டன் ஷோயப் மாலிக் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் மூவரின் அதிரடியால் அந்த அணி 16 ஓவரில் 170 ரன்களை குவித்தது. 

16 ஓவரில் 171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியில் அந்த அணியின் கேப்டன் முன்ரோவை தவிர மற்ற அனைவருமே சொதப்பினர். முன்ரோ மட்டும் 25 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதால் அந்த அணி 13.4 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து வான்கூவர் நைட்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஷோயப் மாலிக், சிக்ஸர் அடித்து இரண்டு கண்ணாடிகளை உடைத்தார். 26 பந்துகளில் 46 ரன்களை குவித்த மாலிக், 3 சிக்ஸர்கள் விளாசினார். அதில் இரண்டு சிக்ஸர்கள் ஸ்டேடியத்தில் இருந்த கண்ணாடிகளை பதம்பார்த்தது. மாலிக் அடித்த 2 சிக்ஸர்கள் 2 கண்ணாடிகளை உடைத்தது. அந்த வீடியோ இதோ...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

In an unusual scenario, Shoaib Malik literally hit two glass breaking sixes. #GT2019 #BWvsVK

A post shared by GT20 Canada (@gt20canada) on Aug 9, 2019 at 4:33am PDT