Asianet News TamilAsianet News Tamil

இவ்வளவு மோசமாவா ஆடுவீங்க..? கேப்டன்சி ரொம்ப கேவலம்.. தென்னாப்பிரிக்க அணியை கடுமையாக சாடிய அக்தர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துவிட்டது. 

shoaib akhtar slams south africa team after worst performance against india
Author
Pakistan, First Published Oct 14, 2019, 3:57 PM IST

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியது. புனேவில் நடந்த இரண்டாவது போட்டியில், முதல் இன்னிங்ஸில் 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில்ம் 189 ரன்களுக்கும் சுருட்டி, இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி. ச்ச்ச்ச்ச்ச்

இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிக்கு சவாலே விடுக்காமல் சரணடைந்தது தென்னாப்பிரிக்கா. முதல் போட்டியில் டீன் எல்கரும் டி காக்கும் கடுமையாக போராடினர். இருவருமே அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர். இரண்டாவது போட்டி நடந்த புனே ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தும் கூட, அந்த அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் பெரிதாக மிரட்டவில்லை. 

shoaib akhtar slams south africa team after worst performance against india

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி தோல்வியை தழுவியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. அனுபவமில்லாத அணி என்பதால், அனுபவம் வாய்ந்த வலுவான இந்திய அணியை தென்னாப்பிரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் கூட, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பியது அந்த அணிக்கு மிகவும் வருத்தமான சம்பவம்தான். 

இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் மோசமான ஆட்டத்தை கண்ட ஷோயப் அக்தர், தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் ஏமாற்றமளித்தது. முதலில், உலக கோப்பையில் படுமோசமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய சறுக்கலை சந்தித்த தென்னாப்பிரிக்கா, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பலத்த அடி வாங்கியுள்ளது. கேப்டன்சி மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டம் என அனைத்துமே படுமோசம் என அக்தர் விமர்சித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios