வெள்ளை பந்து கிரிக்கெட்டில், 2019க்கு முன்புவரை இந்திய அணியில் 2 ஆண்டுகள் கோலோச்சியது குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து 2017-2018ம் ஆண்டுகளில், இந்திய அணி ஆடிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்தனர்.

இதையடுத்து உலக கோப்பையில் அவர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் பருப்பு உலக கோப்பையில் வேகவில்லை. அதனால் உலக கோப்பைக்கு பின்னர் அவர்கள் இருவரையும் சேர்த்து ஆடும் லெவனில் எடுப்பதேயில்லை. இருவரில் ஒருவர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெறுகின்றனர். அதிலும் சாஹல் தான் அதிகமாக இடம்பிடிக்கிறார். 

Also Read - ஒரு தடவை தான்டா மிஸ் ஆகும்.. ஒவ்வொரு தடையும் இல்ல.. பிரித்வி ஷா அதிரடி பேட்டிங்

டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு அணிகளிலுமே பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால், ஜடேஜா நிரந்தரமாக ஒரு இடத்தை பிடித்துவிடுகிறார். ஒருநாள் போட்டிகளில் அவருடன் சாஹல் எடுக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் ஜடேஜா, சுந்தர், சாஹல் ஆடுகின்றனர். 

நியூசிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் கூட, சாஹல் சிறப்பாக பந்துவீசினார். இந்நிலையில், அவரை ஸ்மார்ட்டான வீரர்  என அக்தர் புகழ்ந்துள்ளார். 

Also Read - ஒருநாள் கிரிக்கெட்டில் நான் எதிர்த்து ஆடியதில் இவங்க 11 பேரும்தான் பெஸ்ட்.. முன்னாள் ஜாம்பவானின் தேர்வு

இதுகுறித்து பேசிய அக்தர், ஜடேஜா அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். குல்தீப் யாதவ் இப்போதெல்லாம் சரியாக ஆடுவதில்லை. சாஹல் தான் சிறப்பாக வீசுகிறார். அவர் இனிமேல் பென்ச்சில் உட்காரவைக்கப்படவே மாட்டார். இந்திய அணியின் ஆடும் லெவனில் சாஹல் கண்டிப்பாக இருப்பார். பேட்ஸ்மேன்களை குழப்புவதற்கான உத்திகளை சாஹல் வைத்திருக்கிறார். அவர் ஒரு முழுமையான ரிஸ்ட் ஸ்பின்னர். அவர் பேட்ஸ்மேன்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் ஸ்மார்ட்டான ரிஸ்ட் ஸ்பின்னர். அவரை அணியிலிருந்து ஓரங்கட்டுவதற்கு வாய்ப்பேயில்லை என்று அக்தர் தெரிவித்துள்ளார்.  

நியூசிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலுமே ஆடிய சாஹல், முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. அந்த போட்டியில் அவருக்கு பதிலாக ஆடிய குல்தீப் யாதவ், 10 ஓவரில் 84 ரன்களை வாரி வழங்கியதால், அடுத்த 2 போட்டிகளிலும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவருக்கு பதிலாக சாஹல் ஆடினார். அந்த இரண்டு போட்டிகளிலும் சாஹல் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.