1991 - 2010 தான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த காலக்கட்டம். அந்த காலக்கட்டத்தில் தான், அனைத்து அணிகளிலும் தலைசிறந்த வீரர்கள் பலர் ஆடினர். சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங், கங்குலி, ராகுல் டிராவிட், ஸ்டீவ் வாக், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், யுவராஜ் சிங், குர்ட்லி ஆம்ப்ரூஸ், வால்ஷ், மெக்ராத், சமிந்தா வாஸ், யூனிஸ் கான், இன்சமாம் உல் ஹக், சேவாக், ஸ்டீவ் வாக், மேத்யூ ஹைடன், சந்தர்பால், சங்கக்கரா, ஜெயவர்தனே, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆடிய காலக்கட்டம் அது. 

அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான ஷோயப் அக்தர், இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் ஆல்டைம் டாப் 10 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த 10 வீரர்களுமே ஒரே காலக்கட்டத்தில் ஆடியவர்கள். 

அந்த 10 வீரர்களில் 4 இந்திய வீரர்கள் மற்றும் 6 பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்துள்ளார். இந்தியாவிலிருந்து 4 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த அக்தர், ஒரு பவுலரைக்கூட இந்தியாவிலிருந்து தேர்வு செய்யவில்லை. அனைத்து பவுலர்களுமே பாகிஸ்தான் வீரர்கள் தான். 

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங் ஆகிய நான்கு இந்திய வீரர்களை தேர்வு செய்தார். பாகிஸ்தானிலிருந்து சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக் ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்களையும் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கையும் ஸ்பின்னராக சக்லைன் முஷ்டாக்கையும் ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரமையும் வக்கார் யூனிஸையும் தேர்வு செய்துள்ளர். 

அக்தர் தேர்வு செய்த இந்தியா - பாகிஸ்தான் டாப் 10 கிரிக்கெட் வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர், சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், அப்துல் ரசாக், யுவராஜ் சிங், சக்லைன் முஷ்டாக், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்.