Asianet News TamilAsianet News Tamil

அக்தரின் ஆல்டைம் ஓடிஐ லெவன்! கபில் தேவ்,தோனி,இன்சமாமை எல்லாம் விட்டுட்டு அக்தரின் அதிர்ச்சிகர கேப்டன்சி தேர்வு

ஷோயப் அக்தர் தனது ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

shoaib akhtar picks his all time best odi eleven
Author
Pakistan, First Published Jul 18, 2021, 3:50 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் ஷோயப் அக்தர், தனது அதிவேகமான பவுலிங்கால் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங் உட்பட பல சிறந்த பேட்ஸ்மேன்களை எல்லாம் மிரட்டியவர்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அக்தர், தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். கிரிக்கெட் தொடர்பான அலசல்கள், தனது பார்வை, அணிகளின் செயல்பாடுகள், விமர்சனங்கள், தனது கெரியர் அனுபவம் என பல தகவல்களை அந்த யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரையும், வெஸ்ட் இண்டீஸின் கார்டான் க்ரீனிட்ஜையும் தேர்வு செய்துள்ளார்.

3 மற்றும் 4ம் வரிசைகளில் முறையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான இன்சமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வர் ஆகிய இருவரையும், அதன்பின்னர் தோனி மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய 2 மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களையும் தேர்வு செய்த அக்தர், 7ம் வரிசையில் யுவராஜ் சிங்கையும், ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் ஆகிய இருவருடன் இந்திய அணியின் உலக கோப்பை வின்னிங் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில் தேவை தேர்வு செய்துள்ளார். 

ஸ்பின்னராக ஆஸி., ரிஸ்ட் ஸ்பின் ஜாம்பவான் ஷேன் வார்னை தேர்வு செய்த அக்தர், அதிர்ச்சிகரமாக அவரையே இந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களான கபில் தேவ் மற்றும் தோனி ஆகிய இருவரையும் தேர்வு செய்த அக்தர், அவர்களில் இருவரில் ஒருவரையோ அல்லது பாகிஸ்தானின் சிறந்த கேப்டனான இன்சமாம் உல் ஹக்கையோ கேப்டனாக தேர்வு செய்யாமல் ஷேன் வார்னை கேப்டனாக தேர்வு செய்து அதிர்ச்சியளித்தார்.

அக்தரின் ஆல்டைம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் லெவன்:

கார்டான் க்ரீனிட்ஜ், சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், தோனி, ஆடம் கில்கிறிஸ்ட், யுவராஜ் சிங், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், கபில் தேவ், ஷேன் வார்ன்(கேப்டன்).
 

Follow Us:
Download App:
  • android
  • ios