Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியில் மாற்ற வேண்டியது கேப்டன இல்ல.. நாலு வார்த்தை சொன்னாலும் அதை நறுக்குனு சொன்ன அக்தர்

உலக கோப்பை தோல்விக்கு பின்னரும் கோலியே கேப்டனாக தொடர்வதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். உலக கோப்பை வரைதான் கோலி கேப்டன் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் உலக கோப்பைக்கு பின்னரும் எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் மீண்டும் கோலியே கேப்டனாக தொடர்கிறார். கோலி கேப்டனாக நீடிப்பது அவரே எடுத்த முடிவா அல்லது தேர்வுக்குழு எடுத்த முடிவா என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
shoaib akhtar feels no need to change team indias captain
Author
Pakistan, First Published Aug 2, 2019, 11:44 AM IST

உலக கோப்பை அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியதை அடுத்து கேப்டன் மாற்றம் குறித்த பேச்சு உலாவந்தது. 

ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை தூக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்திய அணியில் தற்போதிருக்கும் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை உருவாக்க ரோஹித்தால் முடியும் என்பதால் கேப்டனை மாற்ற இதுவே சரியான தருணம் என பிசிசிஐ அதிகாரியே தெரிவித்திருந்தார். 

ஆனாலும் கோலி தான் கேப்டனாக தொடர்கிறார். இந்திய கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக திகழும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து இறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

shoaib akhtar feels no need to change team indias captain

உலக கோப்பை தோல்விக்கு பின்னரும் கோலியே கேப்டனாக தொடர்வதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். உலக கோப்பை வரைதான் கோலி கேப்டன் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் உலக கோப்பைக்கு பின்னரும் எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் மீண்டும் கோலியே கேப்டனாக தொடர்கிறார். கோலி கேப்டனாக நீடிப்பது அவரே எடுத்த முடிவா அல்லது தேர்வுக்குழு எடுத்த முடிவா என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் கவாஸ்கரின் இந்த கருத்திலிருந்து சஞ்சய் மஞ்சரேக்கர் முரண்பட்டிருந்தார். ஷோயப் அக்தரும் கோலியே கேப்டனாக தொடரலாம் என்றுதான் கருத்து தெரிவித்திருந்தார். இந்திய அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க வேண்டுமா என்று அக்தரிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, தேவையில்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளித்திருந்தார் அக்தர். 

shoaib akhtar feels no need to change team indias captain

இந்நிலையில், கோலியை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை காரணத்துடன் விளக்கியுள்ளார் அக்தர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்தர், விராட் கோலி கடந்த 3-4 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல பயிற்சியாளர் மற்றும் நல்ல தேர்வாளர்கள் ஆகிய இரண்டையும் கோலிக்கு கொடுத்தால் போதும். ரோஹித் சர்மா நல்ல கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கினால் அது முட்டாள்தனமான முடிவாகத்தான் இருக்கும் என்று அக்தர் தனது அழுத்தமான கருத்தை பதிவு செய்துள்ளார். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios