Asianet News TamilAsianet News Tamil

எனக்கு சொல்லி கொடுங்கனு அவரைத்தவிர வேறு பாக்., பவுலருமே என்கிட்ட கேட்டதில்ல..! அக்தர் மீண்டும் அதிருப்தி

சாகிப் மஹ்மூத்தை தவிர வேறு எந்த பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலரும் தன்னிடம் பயிற்சியளிக்குமாறு கேட்டதேயில்லை என்று ஷோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 

shoaib akhtar discontent of pakistan bowlers not asking him any advice about fast bowling
Author
Pakistan, First Published Jul 10, 2021, 9:10 PM IST

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி என அபாரமான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்டு எதிரணிகளை தெறிக்கவிட்ட அணி பாகிஸ்தான். தற்போது முகமது ஆமீர், வஹாப் ரியாஸ், ஜூனைத் கான் ஆகியோர் உள்ளனர். ஆனாலும் இளம் பவுலர்கள் அவ்வளவு சிறப்பானவர்களாக இல்லை. 

ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் அந்தளவிற்கு மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லை. பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் தன்னிடம் எந்த ஆலோசனையும் கேப்டதேயில்லை என்று ஷோயப் அக்தர் ஏற்கனவே தனது அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய பவுலர்களே தன்னிடம் ஆலோசனை கேட்கும் நிலையில், பாக்., பவுலர்கள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்ற அதிருப்தியை அக்தர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், இப்போதும் அதுகுறித்து பேசியுள்ள அக்தர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடியபோது சாகிப் மஹ்மூத் என்னிடம் ஆலோசனை கேட்டார். அவரது கால்கள் மற்றும் தோள்பட்டைகளில் மெலிவாக இருப்பதால் பவுலிங்கில் போதிய வேகம் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்தேன். அதை ஏற்று, கால் மற்றும் தோள்பட்டை பகுதிகளில் சற்று சதை பிடித்ததால் அவருக்கு வேகம் கிடைத்தது. பாகிஸ்தானுக்காக ஆடும்போது மீண்டும் என்னிடம் ஆலோசனை கேட்டார். ஆனால் அவரைத்தவிர வேறு எந்த பாகிஸ்தான் பவுலரும் என்னிடம் ஆலோசனை கேட்பதேயில்லை என்று அக்தர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios