மகனை பார்க்க முடியாமல் தவித்த ஷிகர் தவான் – பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

மகனின் பிறந்தநாளுக்கு அவரை பார்க்க முடியாமல் தவித்த ஷிகர் தவான் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Shikhar Dhawan, who has not been able to see his son Zoravar for a year, has posted a heartfelt post wishing him on his birthday today rsk

இந்திய அணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியவர் ஷிகர் தவான். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அவ்வப்போது ஐபிஎல் சீசன்களில் மட்டும் தலைகாட்டி வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

உங்கள் மகனாக இருப்பது மிகவும் அதிஷ்டசாலி – தந்தையின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த தீபக் சாஹர்!

இந்த நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஷிகர் தவான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல குழப்பமான காலத்தை கடந்து வருகிறார். ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி ஆஷா முகர்ஜி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அக்டோபர் 4ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

ஷிகர் தவான் கடந்த 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஜோராவர் என்ற மகன் உள்ளார். இவர்களின் திருமணத்துக்கு முன்பே ஆயிஷாவுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருடன் திருமணமாகி, அவர்களுக்கு 2 மகள்களும் இருந்தனர்.

South Africa vs India 1st Test: முதல் டெஸ்ட் – அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்!

அந்த நபருடனான திருமண உறவை முறித்துக்கொண்டு, நிரந்தரமாக இந்தியாவில் தன்னுடன் வசிப்பதாக உறுதி அளித்ததன் பேரில்தான் ஷிகர் தவான் ஆயிஷாவை மணம் முடித்துள்ளார். ஆனால், ஆயிஷா சொன்னபடி நடந்துகொள்ளாமல் முன்னாள் கணவருடன் மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளார்.

தனது 2 மகள்கள் மற்றும் மகன் ஜோராவருடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பியுள்ளார். இதனால் தனது மகனை பிரிந்து வேதனைக்கு உள்ளான ஷிகர் தவான், விவகாரத்து பெற முடிவு செய்து டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி ஷிகர் தவானுக்கு விவாகரத்து வழங்கப்படட்து.

பிரசித் கிருஷ்ணா அறிமுகம், டீம் இந்தியாவில் யாரெல்லாம் இருக்காங்க? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!

அதோடு, தவானின் மகன் ஜோராவர் ஒவ்வொரு ஆண்டும் பாதி விடுமுறை நாட்களை தவான் மற்றும் தவானின் குடும்பத்தினருடன் செலவிடும் வகையில் ஜோராவை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று ஆயிஷாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமின்றி தவான் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மகனைப் பார்க்கவும், இருவரும் வீடியோ காலில் சந்தித்து உரையாடவும் ஒத்துழைக்க வேண்டும் என ஆயிஷாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்திருந்தது.

SA vs IND 1st Test Toss: ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் சிக்கல் – மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம்!

ஆனால், இதெல்லாம் நடக்காத நிலையில், ஜோராவரின் புகைப்படத்தை பகிர்ந்து தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் உன்னை நேரில் பார்த்து ஒரு வருடம் ஆகிறது, இப்போது, ​​கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக, நான் எல்லா இடங்களிலிருந்தும் தடுக்கப்பட்டிருக்கிறேன், அதனால் என் பையனே, உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அதே படத்தை பதிவிடுகிறேன்.

என்னால் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், டெலிபதி மூலம் உங்களுடன் இணைகிறேன். நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன், நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள், நன்றாக வளர்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்பா, எப்போதும் உன்னை மிஸ் செய்கிறார், நேசிக்கிறார். அவர் எப்போதும் நேர்மறையாக இருக்கிறார், கடவுளின் அருளால் நாம் மீண்டும் சந்திக்கும் நேரத்திற்காக புன்னகையுடன் காத்திருக்கிறார். குறும்புத்தனமாக இருங்கள், கொடுப்பவராக இருங்கள், பணிவாகவும், இரக்கமுள்ளவராகவும், பொறுமையாகவும், வலிமையாகவும் இருங்கள். உங்களைப் பார்க்காவிட்டாலும், உங்கள் நல்வாழ்வு மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பற்றிக் கேட்டு, நான் என்ன செய்கிறேன் மற்றும் என் வாழ்க்கையில் என்ன புதியது என்பதைப் பகிர்ந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு செய்திகளை எழுதுகிறேன்.

லவ் யூ லோட்ஸ் ஜோரா ❤️

அப்பா….

என்று ஷிகர் தவான் பதிவிட்டுள்ளார். இந்த பதிவைப் படிக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் கண்களீல் கண்ணீர் துளிகள் தான் வருகிறது….

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios