South Africa vs India 1st Test: முதல் டெஸ்ட் – அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

India Struggle to Score runs against South Africa in 1st Test Match after losing 3 wickets rsk

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியை பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இந்தப் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

பிரசித் கிருஷ்ணா அறிமுகம், டீம் இந்தியாவில் யாரெல்லாம் இருக்காங்க? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங்!

இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், பொறுமையாக ஆரம்பித்த ரோகித் சர்மா ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில் தடுமாறி வந்தார். இதையடுத்து கஜிசோ ரபாடா வீசிய 4.6 ஓவரில் 5 ரன்கள் எடுத்த நிலையில், நந்த்ரே பர்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

SA vs IND 1st Test Toss: ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் சிக்கல் – மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம்!

இவரைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 12 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நந்த்ரே பர்கர் பந்தில் கைல் வெர்ரேன்னேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக நிதானமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 17 ரன்களில் நந்த்ரே பர்கர் பந்தில் கைல் வெர்ரேன்னேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

சென்னையில் ஹாட்ரிக் தோல்வி – ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்!

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

தென் ஆப்பிரிக்கா:

டீல் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஸி, டெம்பா பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கெயில் வெர்ரேனே (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சென், ஜெரால்டு கோட்ஸி, கஜிஸோ ரபாடா, நந்த்ரே பர்கர்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios