Asianet News TamilAsianet News Tamil

WI vs IND: 3 ரன்னில் சதத்தை தவறவிட்ட தவான்.. கில், ஷ்ரேயாஸ் அரைசதம்! முதல் ODIயில் பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஷிகர் தவான் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு 97 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கில் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். இந்திய அணி பெரிய  ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது.
 

shikhar dhawan missed century by just 3 runs shubman gill and shreyas iyer fifty pave the way for india to score big in first odi against wi
Author
Trinidad and Tobago, First Published Jul 22, 2022, 9:37 PM IST

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று டிரினிடாட்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் ஆடாததால் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி தான் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது.

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், அகீல் ஹுசைன், ரொமாரியோ ஷெஃபெர்டு, அல்ஸாரி ஜோசஃப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஷுப்மன் கில் அதிரடியாக ஆட, தவான் நிதானம் காட்டினார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கில் 53 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்களை விளாசி ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் தவானுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய தவான், சதத்தை நெருங்கிய நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் 18வது சதத்தை விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்னில் ஆட்டமிழந்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து களத்தில் நிற்கிறார். 213 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 3வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயருடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்துள்ளார். இன்னும் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகிய அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிப்பது உறுதி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios