எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த கிரிக்கெட் அணியாக திகழும் ஆஸ்திரேலியா, இப்போதும் சிறந்த அணியாகவே திகழ்கிறது. 

ஸ்டீவ் வாக், பாண்டிங், மைக்கேல் கிளார்க் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருந்தார். அப்படியான சூழலில் அவரும் வார்னரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றதை அடுத்து, சில மாதங்கள் ஆஸ்திரேலிய அணி கடுமையான பின்னடைவை சந்தித்தது. 

அதிலிருந்து மீண்டு உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடியது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. பேட்டிங்கில் ஸ்மித்தே இல்லையென்றாலும் கூட, அவரது இடத்தை நிரப்புவதற்கு லபுஷேன், ஹேண்ட்ஸ்கம்ப் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கும் குறையில்லை. இதையும் படிங்க - மத்த ஸ்டேடியம்லாம் எதுக்கு கட்டி கெடக்கு..? பல்லாங்குழி ஆடுறதுக்கா..?

ஆனால் தரமான மாற்று ஸ்பின்னர் இல்லை என்பதே உண்மை. அந்த உண்மையை உரக்க சொல்லியுள்ளார் ஷேன் வார்னே. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்னே, நாதன் லயன் என்ற அபாரமான ஸ்பின்னரை பெற்றது நமது அதிர்ஷ்டம். அவர் உலகம் முழுதும் அனைத்து கண்டிஷன்களிலும் அபாரமாக பந்துவீசி அசத்திவருகிறார். ஆனால் அவர் அவருக்கு ஏதாவது நடந்துவிட்டால், அவர் ஆடமுடியாத சூழலில் ஆஸ்திரேலிய அணியின் நிலை என்ன..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாதன் லயனுக்கு சரியான, தரமான மாற்று ஸ்பின்னர் இல்லை என்பதையும் லயன் இல்லையென்றால் ஆஸ்திரேலிய அணியின் நிலை மோசமாகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் ஷேன் வார்னே.