பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடருக்கான ஆடும் லெவனை முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், இளம் வீரரை சேர்த்துள்ள வார்னே, நட்சத்திர சீனியர் வீரரை ஆடும் லெவனில் சேர்க்காமல் 12வது வீரராக பென்ச்சில் உட்காரவைத்துள்ளார். 

டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள வார்னே, மூன்றாம் வரிசை வீரராக மார்னஸ் லபுஷேனையும் நான்காம் வரிசைக்கு ஸ்மித்தையும் தேர்வு செய்துள்ளார். முதல் நான்கு பேட்ஸ்மேன்களாக கண்டிப்பாக இவர்கள்தான் இருப்பார்கள் என்பது தெரிந்த விஷயமே. 

ஐந்தாம் வரிசைக்கு மேத்யூ வேடை தேர்வு செய்துள்ள வார்னே, ஆறாம் வரிசையில் இறங்க 21 வயது இளம் வீரரான வில் புகோவ்ஸ்கியை தேர்வு செய்துள்ளார். அதன்பின்னர் கேப்டன் டிம் பெய்ன் இறங்குவார். மூன்று ஃபாஸ்ட் பவுலர்களை தேர்வு செய்துள்ள வார்னே, அந்த மூவரில் ஒருவராக மிட்செல் ஸ்டார்க்கை எடுக்கவில்லை. ஜேம்ஸ் பேட்டின்சன், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாகவும், ஸ்பின்னர் நாதன் லயனையும் அவரது ஆடும் லெவனில் எடுத்துள்ளார். மிட்செல் ஸ்டார்க்கை 12வது வீரராக எடுத்துள்ளார். 

இவ்வளவுக்கும் அவர் தான் அந்த அணியின் டாப் ஃபாஸ்ட் பவுலர். ஆஸ்திரேலிய அணிக்கு ஏராளமான வெற்றிகளை குவித்து கொடுத்துள்ள மிட்செல் ஸ்டார்க், இக்கட்டான நேரங்களில் எல்லாம் அந்த அணிக்கு விக்கெட் வீழ்த்தி கொடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். அதுமட்டுமல்லாமல் 2015 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அவர்தான் அந்த உலக கோப்பையின் தொடர் நாயகன். சொந்த மண்ணில் நன்றாக வீசக்கூடியவர் மிட்செல் ஸ்டார்க். அப்படியிருந்தும் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்க இருக்கக்கூடிய டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் ஸ்டார்க்கை எடுக்கவில்லை வார்னே. 

ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி;

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், வில் புகோவ்ஸ்கி, டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பேட்டின்சன், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், ஹேசில்வுட். 

12வது வீரர் - மிட்செல் ஸ்டார்க்.