இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்த நிலையில்,  இனிவரும் போட்டிகளில் கோலியும் ஆடாததால், எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று இந்திய அணி இந்த தொடரில் ஒயிட்வாஷ் ஆகும் என்று மார்க் வாக் மற்றும் மைக்கேல் வான் ஆகிய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஸ்ரீகாந்த், கம்பீர் போன்றோர் இந்திய அணி மீது நம்பிக்கை வைத்து, இந்திய அணியால் கம்பேக் கொடுக்க முடியும் என்று ஊக்கமளிக்கும் விதமாக பேசினாலும், ஷேன் வார்ன், இந்திய அணி இந்த தொடரில் மீண்டெழ முடியாது; ஆஸி., அணி அடித்து காலி செய்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்ன், ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை அடித்து காலி செய்துவிடும் என நினைக்கிறேன். அடிலெய்டில் அடைந்த தோல்வியே இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி. அதிலிருந்து மீண்டு இந்த தொடரில் இனிமேல் கம்பேக் கொடுப்பது கடினம் என்று வார்ன் தெரிவித்துள்ளார்.