ஐபிஎல் 16வது சீசனிலிருந்து கேகேஆர் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது.
இந்த சீசனில் சில அணிகளால் பெரும் எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட சில பெரிய வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகினர். ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய பெரிய இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் காயத்தால் ஆடவில்லை.
ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் முதல் பாதி சீசனிலிருந்து விலகினர். ஜானி பேர்ஸ்டோ, வில் ஜாக்ஸ், பிரசித் கிருஷ்ணா, ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய வீரர்கள் ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகினர்.
கேகேஆர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஆடிவருவதால், அந்த தொடர் முடிந்ததும் ஐபிஎல்லில் கேகேஆர் அணியுடன் இணைவார்கள் என்று சொல்லப்பட்டது.
ஆனால் ஐபிஎல் 16வது சீசனிலிருந்து விலகுவதாக ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். வங்கதேச டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் கேப்டன், சீனியர் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். ஒரு ஆல்ரவுண்டர் என்ற முறையிலும், கேகேஆர் அணியில் நீண்டகாலம் பங்களிப்பு செய்தவர் என்ற வகையிலும் அவரை ரூ.1.5 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்திருந்தது. இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடி முடித்த பின் தன்னால் ஐபிஎல்லில் ஆடமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
IPL 2023: தம்பி நீ சரிப்பட்டு வரமாட்ட.. தூக்கி எறியும் சிஎஸ்கே..! ஆடும் லெவனில் ஒரு அதிரடி மாற்றம்
தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். லிட்டன் தாஸ் கேகேஆர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
