பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, தனது முந்தைய காலம் மற்றும் தனது காலத்தில் தன்னை கவர்ந்த வீரர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக பல ஆண்டுகளாக ஜொலித்த அஃப்ரிடி, 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாகவும் முன்னோடியாகவும் திகழும் ஷாகித் அஃப்ரிடி, தனது காலத்தில் தன்னை கவர்ந்த வீரர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அஃப்ரிடி, எனது ஆரம்பக்கட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் இன்சமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வர் ஆவர். அவர்களது ஆட்டத்தை டிவியில் ஆர்வமுடன் பார்த்த நான், பிற்காலத்தில் அவர்களுடன் இணைந்து ஆடியதன் மூலம் எனது கனவு நனவானது. மற்ற நாட்டு வீரர்கள் என்றால் என்னை கவர்ந்தது பிரயன் லாரா மற்றும் க்ளென் மெக்ராத் ஆவர் என்று அஃப்ரிடி தெரிவித்தார்.