Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS டி20 போட்டியை காண ஹைதராபாத்தில் டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு.. போலீஸ் தடியடி! வைரல் வீடியோ

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டி20 போட்டியை காண ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

several injured in india vs australia ticket sale in hyderabad rajiv gandhi cricket stadium
Author
First Published Sep 22, 2022, 6:57 PM IST

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மொஹாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2வது டி20 போட்டி செப்டம்பர் 23ம் தேதி நாக்பூரில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 25ம் தேதி கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது.

இதையும் படிங்க - இந்திய அணி இவரை ஏன் டீம்ல வச்சுருக்காங்கனே தெரியல - மேத்யூ ஹைடன்

3வது டி20 போட்டி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடப்பதால் அந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட் வாங்குவதற்காக இன்று காலை 5 மணி முதலே ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்திற்கு வர தொடங்கினர்.

நேரம் ஆக ஆக ரசிகர் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து டிக்கெட் வாங்க ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் திரளாக திரண்டனர். டிக்கெட் விற்பனை முறைப்படுத்தப்படாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு சம்பவத்தை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர்.

இதையும் படிங்க - பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டர்ங்க.. பாண்டியா அந்தளவுக்குலாம் ஒர்த் இல்ல..! முன்னாள் வீரர் அதிரடி

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஒரு பெண் ரசிகை ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் இச்சம்பவத்தில் யாரும் இறக்கவில்லை என்பதை ஹைதராபாத் காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் மற்றும் போலீஸ் ஆகிய இருதரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டது கூறிய தகவலில் உண்மையில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யாரும் இல்லை. சிலர் காயம் மட்டுமே அடைந்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios