சையத் முஷ்டாக் அலி தொடரில் விதர்பா அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சவுராஷ்டிரா அணி.

சையத் முஷ்டாக் அலி தொடரில் சவுராஷ்டிரா மற்றும் விதர்பா அணிகளுக்கு  இடையேயான போட்டி இந்தூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி, 20 ஓவரில் 233 ரன்களை குவித்தது.

சவுராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் பரோட் அதிரடியாக ஆடி 44 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 93 ரன்களை குவித்தார். பரோட்டுக்கு பின்னர், ப்ரிராக் மன்கத் மற்றும் வசவடா ஆகிய இருவரும் அடித்து ஆடினர். மன்கத் 26 பந்தில் 59 ரன்கள் அடித்தார். வசவடா 20 பந்தில் 39 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் சவுராஷ்டிரா அணி 233 ரன்களை குவித்தது.

234 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை விரட்டிய விதர்பா அணியில் ஒருவர் கூட அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவந்த விதர்பா அணி 17.2 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சவுராஷ்டிரா அணி.