இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய ஞானம்! T20WC அணியில் புறக்கணிப்பு குறித்து பெரிய மனுஷத்தனமா பேசிய சஞ்சு சாம்சன்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டிருந்தனர்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
ஸ்டாண்ட்பை வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
இதையும் படிங்க - INDA vs NZA: சஞ்சு சாம்சன் கேப்டன்சியில் இந்திய அணி அறிவிப்பு
முகமது ஷமியை மெயின் அணியில் எடுக்காதது, சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு ஆகியவை கடும் விமர்சனத்துக்குள்ளானது. மிகத்திறமையான பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை, அதுவும் அவருக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கவில்லை என்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவருக்கு ஆதரவளிக்கும் இந்திய அணி நிர்வாகம், சஞ்சு சாம்சனுக்கு அந்த ஆதரவை அளிப்பதில்லை. சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே இந்திய அணி நிர்வாகம் புறக்கணிக்கிறது. ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சாம்சனை எடுத்திருக்கலாம். தொடர்ச்சியான வாய்ப்புகள் அளிக்காமல் அவரை ஓரங்கட்டுவது சரியல்ல என்று ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். முன்னாள் வீரர்கள் சிலரும் சஞ்சு சாம்சன் புறக்கணிப்பை ஏற்கவில்லை.
சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகிய வீரர்களுக்கு அவர்களது கெரியரின் ஆரம்பத்தில் ஆதரவாக இருந்த வளர்த்துவிட்டார் சௌரவ் கங்குலி. ஒருவேளை கங்குலி ஆதரவாக இல்லாமல் இருந்திருந்தால், மேற்கூறிய மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களை, அவர்களது முழு திறமையையும் அடையாளம் காணப்படாமலேயே இழந்திருப்போம். அதேபோல் தான், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஷ்வின், ஜடேஜா ஆகிய வீரர்களை தோனி வளர்த்துவிட்டார். எனவே திறமையான வீரர்களாகவே இருந்தாலும், கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் ஆதரவு அவசியம்.
இதையும் படிங்க - பாபர் அசாமிடம் படிச்சு படிச்சு சொன்னேன்; அவரு கேட்கல! இவ்ளோ சீக்கிரம் கெடுத்துட்டாங்க- முன்னாள் வீரர் வருத்தம்
சஞ்சு சாம்சனின் புறக்கணிப்புக்கு எதிராக பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில், இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், இந்திய ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன்(தன்னையே குறிப்பிடுகிறார்) யாருக்கு பதிலாக இடம்பெறலாம் என்ற விவாதம் மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டுவருகிறது. கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக நான் ஆடவேண்டுமா..? அவர்கள் எனது சக வீரர்கள். நான் எனது அணி வீரர்களுடன் போட்டி போட்டால், அது எனது அணியை நான் இறக்குவதாக அர்த்தம். 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் இடம்பெறுவது கடினம். அதேவேளையில், பாசிட்டிவாக இருக்கவேண்டியது அவசியம் என்று சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.