சமகாலத்தின் டாப் 5 டெஸ்ட் பவுலர்களை தேர்வு செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர். 

சமகால கிரிக்கெட்டில் ஆடும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களில் சிலர் ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவர் என்கிற லெவலில் உள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரோஹித் சர்மா, ரூட், டிவில்லியர்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களும், பும்ரா, கம்மின்ஸ், அஷ்வின் உள்ளிட்ட பவுலர்களும் ஆல்டைம் சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், சமகாலத்தின் டாப் 5 டெஸ்ட் பவுலர்கள் யார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார். பாட் கம்மின்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய ஐவரும் தான் டாப் 5 டெஸ்ட் பவுலர்கள் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐவரில் ஏன் ஒரு ஸ்பின்னரை கூட எடுக்காதது ஏன் என்று விளக்கமளித்த சஞ்சய் மஞ்சரேக்கர், ஸ்பின்னர்கள் அனைத்து போட்டிகளிலும் ஆடுவதில்லை. அஷ்வின் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனாலும் வெளிநாடுகளில் நடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் ஆடவில்லை என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தார்.