Asianet News TamilAsianet News Tamil

அஷ்வினைலாம் ஆல்டைம் பெஸ்ட் வீரர்னு ஏத்துக்க முடியாது - ச(ர்ச்சை)ஞ்சய் மஞ்சரேக்கர்

ரவிச்சந்திரன் அஷ்வினை ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக மதிப்பிடுவதில் தனக்கு சில பிரச்னைகள் இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

sanjay manjrekar does not agree that ashwin is an all time best
Author
Chennai, First Published Jun 6, 2021, 10:30 PM IST

ரவிச்சந்திரன்  அஷ்வின் சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஷ்வின், டெஸ்ட் அணியின் முதன்மை ஸ்பின்னராக திகழ்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200, 300, 400 ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அஷ்வின், மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 409 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 286 விக்கெட்டுகள் இந்தியாவிலும், 123 விக்கெட்டுகள் வெளிநாடுகளிலும் வீழ்த்தப்பட்டவை.

சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னராக திகழும் அஷ்வினை பலரும் ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக பார்க்கிறார்கள். ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கர் அப்படி பார்க்கவில்லை. அஷ்வினை ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னராக பார்க்க, அவரை தடுக்கும் விஷயம் எதுவென்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், அஷ்வினை ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக மதிப்பிடுவதில் எனக்கு சில பிரச்னைகள் உள்ளன. அடிப்படை பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவிக்கும் அஷ்வின், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை(ஒரு இன்னிங்ஸில்) வீழ்த்தியதில்லை.

கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினுக்கு நிகராக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனை ஜடேஜா பெற்றிருக்கிறார். ஜடேஜாவுக்கு நிகராக விக்கெட்டுகளை வீழ்த்தியும் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அக்ஸர் படேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதான் அஷ்வினை ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர் என்று மதிப்பிடுவதில் எனக்கு இருக்கும் பிரச்னை என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios