Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலிக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் இவர் தான்..! சல்மான் பட் அதிரடி

விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சரியான வீரர் ரிஷப் பண்ட் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.
 

salman butt opines rishabh pant can be next captain of team india after virat kohli
Author
Pakistan, First Published May 27, 2021, 4:04 PM IST

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை உறுதி செய்துள்ள ரிஷப் பண்ட், இந்திய அணியில் எடுக்கப்பட்ட புதிதில் முதிர்ச்சியில்லாமல் ஆடி, இந்திய அணியில் இடத்தை இழந்தார். 

ஆனால் இப்போது அவரது  பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டுமே முன்பைவிட மேம்பட்டிருக்கிறது. இப்போது முதிர்ச்சியுடன் ஆடுகிறார். பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்துவிட்டார்.

salman butt opines rishabh pant can be next captain of team india after virat kohli

ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் ஐபிஎல் 14வது சீசனில் ஆடாததன் காரணமாக, டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், ஒரு தேர்ந்த கேப்டனாக செயல்பட்டு, டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து  புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வைத்தார்.

ரிஷப் பண்ட் அவரது கேப்டன்சி திறனை நிரூபித்த நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவர் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

salman butt opines rishabh pant can be next captain of team india after virat kohli

இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், ரிஷப் பண்ட்டின் உள்நாட்டு கிரிக்கெட் ரெக்கார்டு பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் ஐபிஎல்லில் அவரது கேப்டன்சியை பார்த்திருக்கிறேன். ஐபிஎல் அணி அவரிடம் கேப்டன்சியை கொடுக்கும்போது, பிசிசிஐயும் ரிஷப்பை எதிர்காலத்தில் கேப்டனாக்குவது குறித்த திட்டங்களை வைத்திருக்கும். இன்னும் 8-9 ஆண்டுகளுக்கு கோலி தான். அதன்பின்னர் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக  ரிஷப்புக்கு வாய்ப்புள்ளது என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios