Asianet News TamilAsianet News Tamil

அவரு ஒருவரைத்தவிர வேறு எந்த பவுலருக்கும் நான் பயந்ததில்லை..! சச்சின் டெண்டுல்கரையே பயமுறுத்திய பவுலர்

கிரிக்கெட் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையே அச்சுறுத்திய பவுலர் யார் என்று பார்ப்போம்.
 
sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career
Author
Mumbai, First Published Jun 20, 2020, 5:09 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக, 24 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், பெரும்பாலான பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

100 சர்வதேச சதங்கள், அதிக ரன்கள்(34357 ரன்கள்) ஆகிய அசாத்திய சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்த சாதனைகள் எல்லாம் முறியடிக்கப்படுமா என்பதே பெரிய கேள்விக்குறிதான். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரரும் சச்சின் டெண்டுல்கர் தான். 

மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட சச்சின் டெண்டுல்கர், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங், மீடியம் ஃபாஸ்ட் என அனைத்து விதமான பவுலிங்கையும் அருமையாக ஆடியவர். துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து நாடுகளிலும் அபாரமாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்தவர். 

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

சச்சின் டெண்டுல்கர், டிரைவ், புல் ஷாட், ஃப்ளிக் ஷாட், ஸ்வீப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், கட் ஷாட், இறங்கிவந்து அடித்தல் என அனைத்து விதமான ஷாட்டுகளையும் மிகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் ஆடக்கூடியவர். குறிப்பாக அவரது ஸ்டிரைட் டிரைவ் மிக மிக அருமையாக இருக்கும். ஸ்டிரைட் டிரைவ் ஷாட் என்றாலே, ரசிகர்கள் மனதில் மட்டுமல்லாது, அனைத்து கிரிக்கெட் வீரர்களின் மனதிலும் தோன்றும் பெயர் சச்சின் டெண்டுல்கர் தான். 

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

அனைத்து விதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய அதேவேளையில், மனவலிமையும் பெற்றிருந்ததால், சச்சின் டெண்டுல்கரை வீழ்த்துவது சர்வதேச பவுலர்களுக்கு எளிதாக இருந்ததில்லை. மெக்ராத், சமிந்தா வாஸ் ஆகியோர் அதிகமான போட்டிகளில் சச்சினுக்கு எதிராக ஆடியதால் அதிகமுறை அவரை வீழ்த்தியுள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை விட, அவர் எப்பேர்ப்பட்ட வீரர்களுக்கு எதிராக ஆடி இந்த சாதனைகளையெல்லாம் செய்தார் என்பதுதான் அவரது பெருமை. ஆம்.. சச்சின் டெண்டுல்கர் உலகின் பல்வேறு தலைசிறந்த பவுலர்களை எதிர்த்து தனது கெரியரில் ஆடியுள்ளார். அதுவும் அந்த பவுலர்கள் எல்லாம் அவர்களது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது, அவர்களையெல்லாம் தெறிக்கவிட்டுள்ளார். 

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், குர்ட்லி ஆம்ப்ரூஸ், ஆலன் டொனால்டு, வால்ஷ், க்ளென் மெக்ராத், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் என பல தலைசிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடி, 100 சதங்கள் மற்றும் 34,457 ரன்களை குவித்துள்ளார். 

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

ஒரு பேட்ஸ்மேன் எந்த மாதிரியான பவுலர்களை எதிர்த்து ஆடி ரன்களை குவித்திருக்கிறார் என்பதை வைத்தே, அவர் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன் என்பதை தீர்மானிக்க முடியும். அந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் தான் கிரேட். அதனால் தான் ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படுகிறார். 

அப்பேர்ப்பட்ட சச்சின் டெண்டுல்கரே, ஒரு பவுலரின் பவுலிங்கை எதிர்கொள்ள பயப்படுவாராம். இதை அவரே தெரிவித்துள்ளார். அது யார் என்று பார்ப்போம். 

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு ஏற்கனவே ஒருமுறை பதிலளித்துள்ள சச்சின் டெண்டுல்கர், நான் சொன்னால் நம்பமாட்டீங்க.. தென்னாப்பிரிக்காவின் ஹான்சி க்ரோன்ஜுக்கு தான் நான் அதிகமாக பயந்திருக்கிறேன். நான் களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்ட பின்னர் கூட, அவர் பந்துவீசினால் மட்டும் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வேன். ”நான் ஆலன் டொனால்டு, ஷான் போலாக் பவுலிங்கை ஆடுகிறேன்.. நீங்கள் எனக்காக ஹான்சியின் பவுலிங்கில் ஆடுங்களேன்” என்று எத்தனையோ முறை எனது பேட்டிங் பார்ட்னர்களிடம் கேட்டிருக்கிறேன். என்னை அதிகமான முறை அவர் அவுட்டாக்கியிருக்கிறார் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். 

sachin tendulkar reveals the bowler name that he afraid to face in his international cricket career

ஹான்சி க்ரோன்ஜ் தென்னாப்பிரிக்க அணியில் 1992ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டுவரை, 68 டெஸ்ட் மற்றும் 188 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 43 மற்றும் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 

சச்சினே பயந்துபோனதாக கூறிய ஹான்சி க்ரோன்ஜ் முழுநேர பவுலர் கூட கிடையாது. பார்ட் டைம் பவுலர் தான். அதுவும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர். ஆனால் அவரது அருமையான மற்றும் துல்லியமான பவுலிங், சச்சினை அச்சுறுத்தியுள்ளது. அதனால் தான் அந்த கிரெடிட்டை நேர்மையாக அவருக்கு கொடுத்துள்ளார் சச்சின். 

Follow Us:
Download App:
  • android
  • ios