Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட்டான கிரிக்கெட் மூளைக்காரர் ரோஹித் சர்மா; பயப்படவே மாட்டார்..! சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

ரோஹித் சர்மா ஸ்மார்ட்டான கிரிக்கெட் மூளைக்காரர் என்றும், அவர் பயப்படவே மாட்டார் என்றும் சச்சின் டெண்டுல்கர், ரோஹித்தின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார்.
 

Sachin Tendulkar praises Rohit Sharma captaincy skill
Author
Chennai, First Published Dec 5, 2021, 8:46 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா, விரைவில் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டன்சி திறன் கொண்டவர் அனைவரும் அறிந்ததே.

2013 ஐபிஎல் தொடரின் இடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்குமாறு பரிந்துரைத்தார். இதையடுத்து மும்பை அணியின் கேப்டனாக 2013 சீசனின் இடையே நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, அந்த சீசனில் மும்பை அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார். அந்த சீசனில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் ஆடினர்.

அதன்பின்னர் (2013 சீசனுக்கு அடுத்து) 2015, 2017, 2019, 2020 ஆகிய ஐபிஎல் சீசன்களில் என மொத்தம் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து,  அதிகமுறை ஐபிஎல் டைட்டிலை வென்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் ரோஹித் சர்மா.

இந்திய அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி, ஆசிய கோப்பை, நிதாஹஸ் டிராபி ஆகிய தொடர்களை இந்திய அணிக்கு வென்று கொடுத்து, தனது கேப்டன்சி திறனை மீண்டும் மீண்டும் நிரூபித்ததன் விளைவாக, இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், ரோஹித்துடன் நான் பேசியவரையில் அவர் ஸ்மார்ட்டான கிரிக்கெட் மூளைக்காரர். அவர் எந்த சூழலிலும் பயப்படவே மாட்டார். அழுத்தத்தை மிகச்சிறப்பாக அவர் எதிர்கொண்டதை நானே பார்த்திருக்கிறேன். ஒரு அணியை வழிநடத்தும்போது அப்படி இருப்பது மிக முக்கியம்.

ஒரு கேப்டன் வெவ்வேறு விஷயங்களை கையாள வேண்டும். கேப்டன் கூலாக இருக்க வேண்டியது அவசியம். ரோஹித் சர்மா கூலாக இருப்பார்.  நான் மும்பை அணியில் ஆடியபோது ரோஹித்தின் கேப்டன்சி திறனை நிறைய பார்த்திருக்கிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios