தனது பெயரில் போலி விளம்பரம்: சைபர் கிரைம் பிரிவில் சச்சின் புகார்!
தனது பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தி எடை குறைக்கும் மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதாக சச்சின் டெண்டுல்கர் புகார் அளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் பிஸியாக இருக்கிறார்.
உலகக் கோப்பை ஜெயிக்க கண்டிப்பாக இந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கணும் – ரவி சாஸ்திரி!
இந்த நிலையில், தனது பெயர், போட்டோ மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தி `www.sachinhealth.in இணையதளத்தில் போலீயான விளம்பரம் மூலமாக எடை குறைக்கும் மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டன. அதோடு, சச்சின் கையெழுத்திட்ட டி சர்ட் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரஷீத் கான்!
இது குறித்து எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல் எடையை குறைக்கும் மருந்துகள் சச்சின் பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்தப்பட்டது. அதனுடைய விலை ரூ.899 என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம். சச்சின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்யப்பட்ட இணையதம் மற்றும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைசியாக கொடுத்த வாய்ப்பு: நிரூபித்து காட்டிய விஷ்ணு வினோத்!