உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. 

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளையும் வீழ்த்தியது இந்திய அணி. இதில் ஆஃப்கானிஸ்தானை தவிர மற்ற மூன்று அணிகளுமே சிறந்த அணிகள். ஆனால் இந்திய அணிக்கு டஃப் கொடுத்தது ஆஃப்கானிஸ்தான் அணி மட்டும் தான். 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 224 ரன்களை மட்டுமே அடித்த இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்த போட்டியில் விராட் கோலியின் கேப்டன்சியை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார். விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் எந்த சூழலிலும் விராட் கோலி பயப்படவோ பதற்றப்படவோ குழம்பவோ கிடையாது. திட்டங்களில் மிகத்தெளிவாக இருந்தார் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.