காலத்தால் அழியாத ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகள் பெரும்பாலானவற்றை தன்னகத்தே கொண்டுள்ள தன்னிகரில்லா பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய முதல் வீரர் மட்டுமல்லாமல் ஒரே வீரரும் அவரே. அவரது சத சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதை முறியடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். 

சதங்களின் நாயகனான சச்சின் டெண்டுல்கர், 80 மற்றும் 90 ரன்களை கடந்து அவுட்டானதே ஏராளம். அவற்றில் பாதியை சதமாக மாற்றியிருந்தால் கூட, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்த பேச்சுக்கே இடமிருந்திருக்காது. 

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், குர்ட்னி வால்ஷ், க்ளென் மெக்ராத், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், சக்லைன் முஷ்டாக் ஆகிய தலைசிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடி சதங்களையும் ரன்களையும் குவித்து சாதனைகளை குவித்தவர் சச்சின் டெண்டுல்கர். 

சச்சின் டெண்டுல்கர் களத்திற்கு வந்தாலே, சச்சின்.. சச்சின்.. என்ற முழக்கங்கள் அரங்கை அதிரவைக்கும். பெரிய ரிஸ்க் எல்லாம் எடுக்காமல், பாரம்பரியமான ஷாட்டுகளை மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். ஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ்களை அருமையாக ஆடுவார். அதிலும் குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் ஸ்டிரைட் டிரைவ் வேற லெவலில் இருக்கும். அதை பார்த்து சிலாகித்துக்கொண்டே இருக்கலாம். 

புல் ஷாட், ஹூக் ஷாட், ஸ்வீப் ஷாட் என அனைத்து விதமான ஷாட்டுகளையும் நேர்த்தியாக ஆடக்கூடியவர் சச்சின் டெண்டுல்கர். டெக்னிக்கலாக வலுவாக இருக்கும் ஒரு தரமான பேட்ஸ்மேனுக்கு ஸ்கோர் செய்ய வயது தடையே இல்லை என்பதை ஏற்கனவே நிரூபித்து காட்டிய சச்சின் டெண்டுல்கர், இப்போது மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார். 

தனது 39வது வயது வரை கிரிக்கெட் ஆடிய சச்சின் டெண்டுல்கர், தான் ஓய்வு பெறும்வரை ரன்களை குவித்துக்கொண்டே இருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் டெண்டுல்கருக்கு தற்போது 46 வயதாகிவிட்ட நிலையில், இப்போதும் தனது கிளாசான ஷாட்டுகளை ஆடி அசத்துகிறார். 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் டி20 தொடரில் இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆடிவருகிறார். வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேவாக்கின் அதிரடியான அரைசதத்தால் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, அந்த அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சேவாக் 74 ரன்களை குவித்தார். சச்சின் தனது கிளாசான பேட்டிங்கின் மூலம் 36 ரன்கள் அடித்தார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

இந்த போட்டியில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்ட சச்சின், பந்தை நன்றாக வரவிட்டு, பேக்ஃபூட்டில் அருமையாக ஒரு அப்பர் கட் ஷாட் அடித்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டபோதிலும், சச்சின் டெண்டுல்கர் அடித்த ஷாட்டின் டைமிங் அபாரமானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. 

Also Read - சேவாக் அதிரடி அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி