Asianet News TamilAsianet News Tamil

இனிவரும் போட்டிகளில் ரோஹித் பொளந்து கட்டப்போறாரு..! முன்னாள் வீரர் கொடுக்கும் பில்டப்பில் இங்கிலாந்து அணி பீதி

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் ரோஹித் சர்மா பெரிய இன்னிங்ஸ்களை கண்டிப்பாக ஆடுவார் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
 

saba karim believes rohit sharma will play big knocks in england test series
Author
London, First Published Aug 12, 2021, 5:20 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஜெயித்திருக்க வேண்டியது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில், வெற்றிக்கு வெறும் 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் மழையால் கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. 

முதல் டெஸ்ட்டில் நழுவவிட்ட வெற்றியை, 2வது டெஸ்ட்டில் பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. அதேவேளையில், முதல் போட்டியில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணியும் சுதாரித்துக்கொண்டதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இரு அணிகளுமே 2வது டெஸ்ட்டில் வெற்றி முனைப்பில் களமிறங்கி ஆடிவருகின்றன.

இந்த தொடரின் இனிவரும் போட்டிகளில் ரோஹித் சர்மாவிடமிருந்து பெரிய இன்னிங்ஸ்களை பார்க்கமுடியும் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட்டில் ரோஹித்தும் ராகுலும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்து கொடுத்திருந்தனர். நிதானத்துடன் ஆடிய ரோஹித் களத்தில் நன்றாக செட்டில் ஆகி,  அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து, அபாரமாக ஆடி 36 ரன்கள் அடித்த ரோஹித், அவருக்கு பிடித்தமான புல் ஷாட் ஆடி துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் களத்தில் இருந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், அவர் காட்டிய நிதானம், அவரது டெக்னிக், அவர் பேட்டிங் ஆடிய விதம் ஆகியவற்றை பார்க்கையில், அடுத்தடுத்த போட்டிகளில் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவார் என்று முன்னாள் வீரர் சபா கரீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் கிடைத்தால், இந்திய அணி மெகா ஸ்கோரை அடித்து ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ரோஹித் சர்மா இந்த தொடரில் கண்டிப்பாக இங்கிலாந்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதை அந்த அணியே உணர்ந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios