தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் நேற்று(ஜூன்23) தொடங்கி நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்று நடக்கும் 2வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

திருச்சி அணியில், இந்தியாவிற்கும் தமிழ்நாடு அணிக்கும் ஆடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்ட முரளி விஜய் ஆடுகிறார். 

இதையும் படிங்க - TNPL 2022: நடுவிரலை காட்டி அநாகரிமாக நடந்துகொண்ட ஜெகதீசன்..! தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

முரளி விஜய், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கனேஷ்(விக்கெட் கீப்பர்), முகமது அட்னன் கான், ஆண்டனி தாஸ், சரவண குமார், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, யாழ் அருண்மொழி, அஜய் கிருஷ்ணா.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஏஜி பிரதீப், மணிபாரதி (விக்கெட் கீப்பர்), விஷால் வைத்யா, ஆர் விவேக், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், எம்.சிலம்பரசன், ரங்கராஜ் சுதேஷ், மனோஜ் குமார், கரபரம்பில் மோனிஷ்.