Asianet News TamilAsianet News Tamil

ரோஹித் சர்மா அதிரடி அரைசதம்.. மீண்டும் சொதப்பிய மிடில் ஆர்டர்.! இலங்கைக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா

ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 173 ரன்கள் அடித்து, 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது. 
 

rphit sharma scores fifty and india set challenging target to sri lanka in asia cup 2022 super 4 match
Author
First Published Sep 6, 2022, 9:37 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. 

சூப்பர் 4 சுற்றில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கையும், பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியாவும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. ஃபைனலுக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இலங்கைக்கு எதிராக ஆடிவருகிறது இந்திய அணி.

இதையும் படிங்க - யாருப்பா உனக்கு மெசேஜ் பண்ணலைனு சொல்ற.. அவங்ககிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே? கோலியை விளாசிய கவாஸ்கர்

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா.

முதலில் பேட்டிங்  ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்  கேஎல் ராகுல் 6 ரன்களுக்கு தீக்‌ஷனாவின் பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி ரன்னே அடிக்காமல் மதுஷங்காவின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதையும் படிங்க - பக்கா பிளானுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா..! அந்நிய மண்ணில் அதகளம் செய்யப்போகும் சின்ன தல

ஆனால் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின் அதிரடியை மேலும் கூட்டிய ரோஹித் சர்மா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 41 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். 

நன்றாக ஆடிய சூர்யகுமாரும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா (17), ரிஷப் பண்ட் (17), தீபக் ஹூடா (3) ஆகிய மூவரும் மீண்டும் மிடில் ஆர்டரில் சொதப்ப, கடைசி ஓவரில் அஷ்வின் சிக்ஸர் அடித்து முடிக்க, 20 ஓவரில் 173 ரன்கள் அடித்த இந்திய அணி, 174 ரன்கள் என்ற இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios