MIW vs RCBW: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆர்சிபி – இறுதிப் போட்டிக்கு மும்பைக்கு வாய்ப்பு?

மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தடுமாறி வருகிறது.

Royal Challengers Bangalore Women Struggling to Score runs against Mumbai Indians in WPL 2024 Eliminator at Delhi rsk

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், போட்டியின் 2ஆவது ஓவரிலேயே ஷோஃபி டிவைன் 10 ரன்களில் ஹேலி மேத்யூஸ் பந்தில் கிளீன் போல்டானார்.

அடுத்த ஓவரின் 2.2 பந்திலேயே கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் 10 ரன்களில் நாட் ஷிவர் பிரண்ட் ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த திசா கசாட் ரன் ஏதும் எடுக்காமலும், ரிச்சா கோஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது வரையில் ஆர்சிபி அணியானது 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.

 

மும்பை இந்தியன்ஸ் மகளிர்:

ஹேலி மேத்யூஸ், யாஷ்திகா பாட்டீயா, நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர், சஜீவன் சஞ்சனா, ஹூமைரா காஸி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி மோலினெக்ஸ், எல்லிஸ் பெர்ரி, ஷோஃபி டிவைன், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வார்காம், திஷா கஸாட், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாகூர் சிங்.

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 3 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடிய மும்பை 1ல் வெற்றியும், ஒரு போட்டியில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios