யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2 சீசனில் 11ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 11ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணியானது முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீராங்கனை சப்பினேனி மேக்னா 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அடுத்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா உடன் எல்லிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எல்லீஸ் பெர்ரி 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசியாக வந்த ரிச்சா கோஷ் 21 ரன்கள் சேர்க்க ஆர்சிபி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.